NATIONAL

பிபிஆர் லெம்பா சுபாங் 2 ன் குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் குப்பை பிரச்சனைக்கு உடனடி தீர்வு

ஷா ஆலம், மே 18: பி பி ஆர் லெம்பா சுபாங் 2 ன் குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் குப்பை பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படும் என்று ஶ்ரீ செத்தியா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக உள்ளூராட்சி அபிவிருத்தி அமைச்சுடன் (KPKT) தமது தரப்பு தொடர்பு கொண்டுள்ளதாக ஹலீமி அபூபக்கர் தெரிவித்தார்.

“நான் உள்ளூராட்சி அபிவிருத்தி அமைச்சைத் தொடர்பு கொண்டேன், இந்த மொத்த கழிவுகளின் பராமரிப்பு மற்றும் சேகரிப்பை மேற்கொள்ள வேண்டிய ஒப்பந்ததாரர் இன்னும் நியமிக்கப்படாததால் இந்த சிக்கல் எழுகிறது.

“பராமரிப்பு ஒப்பந்ததாரர் நியமிக்கப்படாத வரை, குப்பை பிரச்சனை மட்டுமல்ல, லிஃப்ட் உள்ளிட்ட பிற பிரச்சனைகளும் மீண்டும் எழும்,” என்று அவர் கூறினார்.

இருப்பினும் KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) வீட்டுக் கழிவு சேகரிப்பு மேற்கொண்டதாக அவர் கூறினார். அதே நேரத்தில் ஒப்பந்தக்காரரை நியமிக்கும் வரை மொத்த கழிவுகளை சேகரிக்குமாறு உள்ளூராட்சி அபிவிருத்தி அமைச்சை அவரது தரப்பு கேட்டுக் கொண்டது.

இதற்கிடையில், அப்பகுதியை பாதிக்கும் பிரச்சனைகளில் மக்கள் பிரதிநிதிகள் கவனம்  செலுத்துவதால் குடியிருப்பாளர்கள்  நிம்மதி அடைந்துள்ளதாக அவ்விடத்தின் குடியிருப்பாளர்கள் சங்கத் தலைவர்  கூறினார்.

“இந்தப் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுப்பதாக மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் உறுதி அளித்ததை தொடர்ந்து நாங்கள் நிம்மதி அடைந்துள்ளோம், இல்லையெனில் இந்த குப்பைப் பிரச்சனை தீர்வு இல்லாமல் தொடரும்” என்று எண்டி சுசிலோ தசிரோன் கூறினார்.


Pengarang :