NATIONAL

சிலாங்கூரில் உள்ள ஏழு அணைகளும்  100 சதவீத நீர் கொள்ளளவை எட்டியுள்ளது

ஷா ஆலம், மே 19: நேற்றைய நிலவரப்படி சிலாங்கூரில் உள்ள ஏழு  நீர்த்தேக்கங்களும் 100 சதவீத  நீர் கொள்ளளவை கொண்டுள்ளன. இதன்வழி மழையின்றி நான்கு மாதங்கள் வரை சமாளிக்க முடியும்.

சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்), 98 நீர் நிலைகளை மாற்று நீர் ஆதாரங்களாக அடையாளம் கண்டுள்ளது என டத்தோ மந்திரி புசார் தெரிவித்தார்.

மே 17ம் தேதி நிலவரப்படி, ஏழு அணைகளின் முழு நீர்த்தேக்கமும் 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

“மொத்த மாநிலத்தின் நீர் பயன்பாட்டின் போக்கின் அடிப்படையில், மூல நீர் கொள்ளளவு நான்கு மாதங்களுக்கு மழையின்றி நீடிக்கும்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கீழ்க்கண்டவை மாநிலத்தின் ஏழு  நீர்த்தேக்கங்கள்

சுங்கை சிலாங்கூர் அணை (உலு சிலாங்கூர்)

சுங்கை திங்கி அணை (உலு சிலாங்கூர்)

சுபாங் ஏரி  (பெட்டாலிங்)

சுங்கை லங்காட் அணை (உலு லங்காட்)

செமினி அணை (உலு லங்காட்)

லாபு ஆஃப் ரிவர் ஸ்டோரேஜ் குளம் (சிப்பாங்)

கிள்ளான் கேட்ஸ் அணை (கோம்பாக்)

பத்து அணை (கோம்பாக்)

எல் நினோவின் நிகழ்வு ஜூன் முதல் செப்டம்பர் வரை 57 சதவிகிதம் ஏற்பட்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை 62 சதவிகிதம் அதிகரிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை எதிர்பார்க்கிறது.

பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை திடீரென அதிகரித்ததன் விளைவாக இந்த நிகழ்வு ஏற்பட்டது. இதனால் காலநிலை அமைப்பு குறைந்த மழைப் பொழிவுடன், வெப்பமாகவும் வறண்டதாகவும் மாறுகிறது.


Pengarang :