NATIONAL

நதி பாதுகாப்பு மீது சமூக விழிப்புணர்வை அதிகரிக்க முயற்சி – லாண்டாசன் லுமாயன் எஸ்டிஎன் பிஎச்டி

ஷா ஆலம், மே 19: நதியைப் பாதுகாப்பதில் சமூக விழிப்புணர்வை அதிகரிக்க லாண்டாசன் லுமாயன் எஸ்டிஎன் பிஎச்டி (எல்எல்எஸ்பி) பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

சமூகத்துடன், குறிப்பாக உள்ளூர் மக்கள் மற்றும் நதியின் முகத்துவாரத்தில் உள்ள மீனவர்களுடன் நெருக்கமாக இருப்பதையே அந்நிறுவனம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதன் நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.

“நாங்கள் இந்த கிராம மக்களுடன் தொடர்பில் இருக்கிறோம். பின்னர் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஜெட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சுத்தம் செய்தோம். இப்போது மீனவச் சங்கம் உருவாக்கிய நதியை ஆய்வு செய்யும் சுற்றுலாத் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

“பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கார்ப்பரேட் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களைக் கிள்ளான் நதியின் நிலையைப் பார்க்க வருமாறு நாங்கள் அழைக்கிறோம்,” என்று சைஃபுல் அஸ்மென் நோர்டின் சமீபத்தில் சிலாங்கூர் மீடியாவிடம் பேட்டி அளித்தார்.

மேலும், எல்.எல்.எஸ்.பி , தீ ஓஷன் கிளீனிங் உடன் இணைந்து நதிக்கழிவுகளைக், குறிப்பாகப் பிளாஸ்டிக்கை அகற்றி அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கான வழிகளைத் தேடுகிறது என்றார் சைஃபுல் அஸ்மென்.

நெஸ்லே மலேசியாவுடன் சேர்ந்து எல்.எல்.எஸ்.பி குப்பை பொறிகளில் இருந்து பிளாஸ்டிக்களை அகற்றி அதனை சுத்தம் செய்வதற்கான திட்டத்தையும் செயல்படுத்தியது.

2018 ஆம் ஆண்டில், மாசுபட்ட கிள்ளான் நதியைச் சுத்தப்படுத்தவும், பாதுகாக்கவும் மற்றும் மேம்படுத்தவும் சிலாங்கூர் கடல்சார் நுழைவாயில் (SMG) திட்டத்தை மாநில அரசு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


Pengarang :