SELANGOR

மாநில அரசின் இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம் ஞாயிறு முதல் ஒன்பது இடங்களில் நடைபெறும்

ஷா ஆலம், மே 19- சிலாங்கூர் அரசின் இரண்டாம் கட்ட இலவச
மருத்துவப் பரிசோதனை இயக்கம் (சிலாங்கூர் சாரிங்) வரும்
ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஒன்பது இடங்களில் நடைபெறவுள்ளது.

மாநில அரசினால் இலவசமாக நடத்தப்படும் இந்த மருத்துவப்
பரிசோதனை இயக்கத்தின் வாயிலாக சுமார் 3,000 பேர் பயனடைவர் என
எதிர்பார்க்கப்படுவதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

இந்த மருத்துவப் பரிசோதனை இயக்கம் மாநில சட்டமன்றம்
கலைக்கப்படும் வரை நடத்தப்பட்டு பின்னர் தேர்தல் முடிந்தவுடன்
மறுபடியும் தொடரும் என்று அவர் சொன்னார்.

மக்களின் சுகாதாத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த மருத்துவப்
பரிசோதனை இயக்கத்தை மாநில அரசு நடத்துகிறது. இந்த இயக்கத்தின்
வாயிலாக பொது மக்கள் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து உரிய
சிகிச்சைப் பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

வழக்கமாக மேற்கொள்ளப்படும் இரத்த, சிறுநீர் மற்றும் நான்கு வித
புற்றுநோய் சோதனைகளோடு கண், பல், காது மற்றும் பிஸியோதெராபி
சோதனைகளும் நடத்தப்படும் என்றார் அவர்.

இந்த பரிசோதனை இயக்கம் பாயா ஜெராஸ் தெங்கா எம்.பி.எஸ்.ஏ.
மண்டபத்திலும் மே 27ஆம் தேதி பெர்மாத்தாங் தொகுதியின் டேவான்
சுங்கை குளோங் குளோங்கிலும் உலு பெர்ணம் தொகுதியிலுள்ள
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மே 28ஆம் தேதியும் நடைபெறும்
என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், வரும் ஜூன் 3ஆம் தேதி சுங்கை துவா, டேவான் ஸ்ரீ சியாந்தான்
மண்டபத்திலும் ஜூன் 4ஆம் தேதி டுசுன் துவா உலு லங்காட் பெங்குலுஅலுவலகத்திலும் ஜூன் 10ஆம் தேதி சுங்கை பீலேக் தாமான் ஸ்ரீ சுங்கை பீலேக்கிலும் இந்த இயக்கம் நடைபெறவுள்ளது.

மோரிப் தொகுதியிலுள்ள தாமான் பந்திங் பாரு மண்டபத்தில் ஜூன் 11ஆம்
தேதியும் மேரு மற்றும் சுங்கை காண்டிஸ் தொகுதிகளில் ஜூன் 17
மற்றும் 18ஆம் தேதிகளிலும் இந்தநிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Pengarang :