NATIONAL

கனமழை, புயல் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததில் 18 வாகனங்கள் சேதம்

கோலாலம்பூர், மே 20:  தலை நகரைச் சுற்றி நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் வீசிய
புயலின் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததில் 18 வாகனங்கள் சேதமடைந்தன.

மரங்கள் விழுந்த சம்பவம் தொடர்பாக MERS 999 மற்றும் அலுவலகத்திற்கு நேரடி
லைனிலிருந்து பல அவசர அழைப்புகள் வந்ததாகவும், உடனே சம்பவ இடத்திற்கு
இயந்திரங்களை அனுப்பியதாகவும் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்
செயல்பாட்டு மையம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

இச்சம்பவத்தால் ஜாலான் கம்போங் அத்தாப், ஜாலான் சுல்தான் இஸ்மாயில், தாமான்
புக்கிட் அங்கசா, கெபோங் ஹெல்த் ஆபீஸ், ஜாலான் அயர் ஜெர்னி மற்றும் பிளாட்
வாங்சா மஜு ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டன.

மேலும், பாயூ மோன் கியாரா, புக்கிட் கியாரா, புக்கிட் வெராலுக், ஜாலான் கிளந்தான்,
ஜாலான் அம்பாங், இஸ்தானா அருங்காட்சியகம், மற்றும் செந்துல் மாவட்டக்
காவல்துறை தலைமையகம் ஆகிய இடங்களும் பாதிக்கப்பட்டன என்று அந்த
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் பிஜிஓ தெரிவித்துள்ளது.

– பெர்னாமா


Pengarang :