NATIONAL

பள்ளி விடுதியில் பகடிவதை – மாணவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்

பாலிக் புலாவ், மே 22: கடந்த வியாழன் அன்று பாலிக் புலாவ்வில் உள்ள மஜ்லிஸ் அமானா ரக்யாடின் (மாரா) கீழ் உள்ள இடைநிலைக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த  ஐந்தாம் படிநிலை மாணவர்களை பள்ளியின் மூன்றாம் படிவம் மாணவரை பகடிவதை செய்ததன் தொடர்பாக வழக்கை விசாரிக்க உதவுவதற்காக காவலில் வைக்கப்பட்டனர்.

அம்மாணவர்கள் அனைவரிடமிருந்தும் வாக்குமூலம் பெற்றுக் கொண்ட பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் என்று தென்மேற்கு மாவட்டக் காவல்துறை தலைவர் சூப்பரின்டெண்டன்ட் கமருல் ரிசால் ஜெனால் தெரிவித்தார்.

“மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன. தண்டனைச் சட்டப்பிரிவு 147 இன் கீழ் வழக்கு இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இரவு 11 மணியளவில் நடந்த இச்சம்பவம், பாதிக்கப்பட்ட மாணவன் காலை தொழுகைக்குத் தாமதமாக வந்ததால் நடந்திருக்கக்கூடும் எனவும் மூத்த மாணவர்கள் தாக்கியதில் அம்மாணவனுக்குக் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவர் காவல்துறையில் புகார் செய்வதற்கு முன்னதாகவே தனது தந்தையிடம் இச்சம்பவம் குறித்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

– பெர்னாமா


Pengarang :