ANTARABANGSA

இணைய நெட்வொர்க் அணுகல் பிரச்சனைக்குத் தீர்வு காண தண்ணீர் கோபுரங்களில் ஆன்டெனாக்கள் பொருத்தும் திட்டம்

கூச்சிங், மே 22 – சரவாக்கில் இணைய நெட்வொர்க் அணுகல் பிரச்சனைக்குத் தீர்வு காண தண்ணீர் கோபுரங்களில் ஆன்டெனாக்கள் பொருத்துவது மாற்று தீர்வாக இருக்கும் என்று தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

சரவாக் டிஜிட்டல் எகானமி கார்ப்பரேஷன் (SDEC) மூலம் மாநிலம் முழுவதும் கட்டப்படவுள்ள 600 தொலைத்தொடர்பு கோபுரங்கள் இலக்கை எட்ட இம் முறை பூர்த்தி செய்ய முடியும் என்றார்.

சரவாக்கில் இந்த திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால்,  தொலைத்தொடர்பு பிரச்சனை உள்ள மற்ற மாநிலங்களிலும் இம்முறை மேற்கொள்ளப்படும்.

“தொழில்நுட்ப கண்ணோட்டத்தில் தொலைத்தொடர்பு உபகரணங்களை நீர் கோபுரங்களில் அல்லது மற்ற உயரமான இடங்களில் நிறுவ முடியுமா என்பதை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம்,” என்று பந்தாய் டிராம்போலில் உள்ள தொலைத் தொடர்பு கோபுரத்தை ஆய்வு செய்த பின்னர் ஃபஹ்மி கூறினார்.

மல்டிமீடியா ஆணையத்தால் (SMA) சரவாக்கில் கட்டப்பட்ட மொத்தம் 125 கோபுரங்கள்  அங்கே நிலவும் தொலைத்தொடர்பு இடைவெளியை குறைக்கவும் மற்றும் இணைக்கவும்  உதவும். அது அடுத்த மாதம் கவாய் கொண்டாட்டத்திற்கு முன்னதாக செயல்படும் என்று ஃபஹ்மி கூறினார்.

– பெர்னாமா


Pengarang :