NATIONAL

உயர் வருவாய் பிரிவினருக்கான (டி20) மின்சார பயன்பாடு மற்றும் ஹஜ் நிதி உதவிக்கான மானியம் நிறுத்தம் 

கோலாலம்பூர், மே 22: உயர் வருவாய் பிரிவினர் (டி20) மின்சார பயன்பாடு மற்றும் ஹஜ் யாத்திரைக்கான  நிதி உதவி மானியங்கள் பெற மாட்டார்கள் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

தகுதியான குழுக்களுக்கு மானிய விநியோகத்தின் மதிப்பீட்டை நிர்வகிக்கவும் ஒருங்கிணைக்கவும் முதன்மை தரவுத் தளம் (PADU) பயன்படுத்தப்படும் என்றார்.

“டி20யைத் தவிர பிற குழுக்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம். டி20க்கு மட்டும், அதாவது பெரிய வீடுகளுக்கு மின்சார மானியம் வழங்கப் படாது.

டி20க்கு அரசாங்கத்திடம் இருந்து மானியம் கிடைக்காது. ஹஜுக்கான முழுச் செலவையும் அவர்கள் செலுத்த வேண்டும், ஏனென்றால் அவர்கள் அதை செலுத்தக்கூடிய நிலையில் உள்ளனர், ”என்று அவர் இன்று டேவான் ரக்யாட் அமர்வின் கேள்வி பதில் நேரத்தின்  போது கூறினார்.

மலேசியாவின் தேசியப் பொருளாதாரத்தை உயர்த்துவதில் இருந்து அமல்படுத்தப்பட்ட புதிய மற்றும் கடுமையான கொள்கைகளை அறிய விரும்பிய டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கேள்விக்குப் பதிலளித்த நிதியமைச்சர் அன்வார் இவ்வாறு கூறினார்.

மேலும் இலக்கு மானியத்தை செயல்படுத்துவது மானிய விலக்கின் நோக்கமாகும் என்றார்.

– பெர்னாமா


Pengarang :