SELANGOR

பேங் சிம்பானன் நேஷனல் (பிஎஸ்என்) சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) புரிந்துணர்வு ஒப்பந்தம்

 ஷா ஆலம், மே 23: வீட்டு வசதிகளுக்காக பல்வேறு  கடன்  வழங்கும்  நிதி நிறுவனமான பேங் சிம்பானன் நேஷனல் (பிஎஸ்என்)  வங்கி உடன் சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்ஓயு) கையெழுத்திட்டது.

தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் பிஎஸ்என் சார்பில் அதன் தலைமை செயல் அதிகாரி ஜே கெய்ரில் மற்றும் பிகேஎன்எஸ் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ மஹ்மூட் அப்பாஸும் கலந்துகொண்டனர்.

இந்த ஒத்துழைப்பு மூலம் வீடு வாங்குபவர்களுக்கு அவர்களின் தேவைகள் மற்றும் தகுதிகளுக்கு ஏற்ப பல்வேறு கட்டணப் பேக்கேஜ்கள் வழங்கப்படுகின்றன என்று மஹ்மூட் கூறினார்.

“இந்த மூலோபாய கூட்டாண்மை வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் தேர்வுகள் வழங்கும். இது அதிகமான மக்களுக்குக் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் வீடு வாங்குபவர்களுக்கு வீட்டு உரிமையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான திட்டமாகும்.

“இந்த ஒத்துழைப்பால் வீடமைப்பு துறையில்  முன்னேற்றத்தை அடைய முடியும், குறிப்பாகச் சிலாங்கூரில் முடிவடைந்த மற்றும் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு, வழங்கப்படும் கடன் பேக்கேஜ்கள் மூலம்  இந்த  மேம்பாடுகளை அடையலாம்,” என்று அவர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இதற்கிடையில், வீடு வாங்குபவர்கள் RM50,000 வரையிலான வீட்டு மரச்சாமான்கள்  மற்றும் மின்சார தளவடங்கள் வாங்கவும், தக்காஃபுல் பாதுகாப்பு காப்புறுதி கட்டணம், வழக்கறிஞர் கட்டணம் மற்றும் மதிப்பீட்டு கட்டணம் போன்ற செலவுக்கான 100 சதவிகிதம் வரையிலான நிதியையும் 35 ஆண்டுகால தவணையில்  பெற வாய்ப்பு உள்ளது என்று பிஎஸ்என் தலைமை நிர்வாக அதிகாரி ஜே கெய்ரில் கூறினார்.

“பிஎஸ்என் வாடிக்கையாளர்களுக்கு நிதி நிர்வாகத்தை திட்டமிட உதவும் ஆலோசனை சேவைகளையும் வழங்குகிறது,” என்று அவர் கூறினார்.

பிகேஎன்எஸ் வீடு வாங்குபவர்கள் www.bsn.com என்ற இணையதளத்தின் மூலம் RM50,000 மதிப்புள்ள வீட்டு அலங்காரப் பரிசுகளைப் பற்றிய கூடுதல் தகவல்களை பெறலாம்.


Pengarang :