NATIONAL

காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய பெண் கைது

கோலாலம்பூர், மே 23 – நேற்று காஜாங்கில் உள்ள பண்டார் பாரு பாங்கியில் காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்

அப்பெண்ணும் (26 வயது) அவருடன் இருந்த ஒரு ஆண் பயணியும் (38 வயது), மதியம் 12.30 மணியளவில் ஜாலான் பெர்சியாரன் பண்டார் பாரு பாங்கியில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களின் வாகனத்தை சோதனை செய்ததில் 2.1 கிராம் மெத்தாம்பேட்டமைன் என நம்பப்படும் படிக படுத்தப்பட்ட போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது எனக் காஜாங் மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி முகமட் ஜைத் ஹாசன் கூறினார்

“அந்த இருவரும் மெத்தாம்பேட்டமைன் உட் கொண்டிருப்பது சோதனையின் தெரிய வந்தது. மேலும், அவர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான முன் பதிவுகளை வைத்திருந்தனர்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இரண்டு சந்தேக நபர்களும் மே 24 வரை மூன்று நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு குறியீடு, ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 12(3) மற்றும் 15(1)(a) மற்றும் சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 42(1) கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அவர்  அபாயகரமாக வாகனம்  செலுத்தி, சுங்கை ரமால் சுங்கச்சாவடியில் உள்ள தடுப்பை மோதி, பல சிவிலியன் வாகனங்களுக்கும், காவல் ரோந்து காரையும் சேதப்படுத்தி அப்பெண் தப்பிக்க முயன்றுள்ள குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

– பெர்னாமா


Pengarang :