SELANGOR

4,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மலிவு விற்பனை மூலம் பயன் அடையும் – தாமான் டெம்பளர் தொகுதி

கோம்பாக், மே 24: தாமான் டெம்பளர் தொகுதியில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள், மாநில அரசின் மலிவு விலை திட்டம்  எதிர்காலத்தில் அப்பகுதியில்  நடத்துவதன் மூலம் அங்கு வாழும் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர்  சிறு சேமிப்பை  பெறுவார்கள்.

ஒரு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை நடைபெறும் ஜெலாஜா எஹ்சான் ரக்யாட் (JER) நிகழ்ச்சியை அதிகரிக்க தொகுதி உத்தேசித்துள்ளதாக சட்டமன்ற உறுப்பினரின்  சிறப்பு அதிகாரி தெரிவித்தார்.

“இந்த தொகுதியில் மக்களின் செலவினங்களின் சுமையைக் குறைக்கும் முயற்சியில் மேலும் ஒன்று அல்லது இரண்டு முறை மலிவு விற்பனையை நடத்த எண்ணம் கொண்டுள்ளோம்.

“ஒவ்வொரு முறையும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யும் போது 300 குடும்பங்களுக்கு உதவ முடிகிற  நிலையில் ஒவ்வொரு வாரமும் நாங்கள் இரண்டு முறை இந்த மலிவு விற்பனையை ஏற்பாடு செய்கிறோம். அதன் வழி ஒரு மாதத்தில் குறைந்தது 2,400 குடும்பங்களுக்கு உதவ முடியும்.

“எனவே, வாரத்திற்கு நான்கு முறை இத்திட்டத்தை ஏற்பாடு செய்தால், ஒரு மாதத்திற்கு இரண்டு மடங்கு அல்லது 4,800 குடும்பங்களுக்கு உதவ முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இருப்பினும், இது சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகம் (பிகேபிஎஸ்) வழங்கும் ஒப்புதல் மற்றும் இடங்களைப் பொறுத்தது” என்று ராவியா ஜகாரியா கூறினார்.

“பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட பி 40 குழுவிற்கு உதவுவதற்காக மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க நாங்கள் இதுவரை 10 முறை மலிவு விற்பனை நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம்.

“மக்களின் நலனைப் பாதுகாக்கும் இந்த திட்டம் தொடர்ந்து பல முறைகள் ஏற்பாடு செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :