NATIONAL

பிரதமர் லங்காவி சர்வதேச கடல் மற்றும் விண்வெளி கண்காட்சியை பார்வையிட்டார்

லங்காவி, மே 24: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மஹ்சூரி சர்வதேசக் கண்காட்சி மையத்தில் (MIEC) லங்காவி சர்வதேசக் கடல் மற்றும் விண்வெளி கண்காட்சியைப் (LIMA ’23) பார்வையிட்டார்.

சர்வதேச கண்காட்சி மையத்தின் வளாகத்தை காலை 8.35 மணி அளவில் பிரதமரும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் வந்தடைந்தனர். அவர்களை போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் மற்றும் விமானப்படை தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ முகமட் அஸ்கர் கான் கோரிமான் கான் ஆகியோர் வரவேற்றனர்.

பிரதமர் தர்மாக்கில் ராயல் மலேசியன் ஏர்ஃபோர்ஸின் F/A18D ஹார்னெட் உட்பட பல வான் பாதுகாப்பு சொத்துக்களின் கண்காட்சியை பார்வையிட்டார்.

இந்தோனேசியா, சீனா, தென் கொரியா, ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கிய ஏரோநாட்டிக் ஷோவில் ஈடுபட்டுள்ள விமானப் படையையும் பிரதமர் சந்தித்தார்.

பின்னர், கண்காட்சி மையத்தில் நடைபெற்ற பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்திடும் விழாவைக் காண்பதற்கு முன், சர்வதேசக் கண்காட்சி மையத்திற்குள் உள்ள பல கண்காட்சிகள் அவர் பார்வையிட்டார்.

நேற்று தொடங்கி மே 27 வரை லிமா (LIMA) ’23, “ஆசியாவின் கடல்சார் மற்றும் விண்வெளி வர்த்தகத் தொடர்பு புள்ளி” என்ற கருப்பொருளுடன் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தை உள்ளடக்கிய இந்தப் பதிப்பு பாதுகாப்பு மற்றும் வணிகத் துறைகளுக்காகத் தொடங்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்வு கடைசியாக 2019 இல் நடைபெற்றது. அதன்பின் உலகைத் தாக்கிய கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு இந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :