NATIONAL

ரப்பர் உற்பத்தி ஊக்கத் தொகையின் (ஐபிஜி) அளவை மாற்ற தற்போதைக்கு  உத்தேசமில்லை

கோலாலம்பூர், மே 24 – ஏற்கனவே  பட்ஜெட் 2023 இல்  அதிகரிப்பட்ட  ரப்பர் உற்பத்தி ஊக்கத் தொகையின் (ஐபிஜி) அளவை (பிஎச்பி) இப்பொழுது மீண்டும்  உயர்த்த அரசாங்கம் நோக்கம் கொண்டிருக்கவில்லை.

ரப்பரின் விலை குறையும் போது வருமானம் பாதிக்கப்படும் சிறு ரப்பர் தோட்டக்காரர்கள்  நலனில் அரசாங்கம் எப்போதும் அக்கறை கொண்டுள்ளது என தோட்டத் தொழில் மற்றும் உற்பத்தி பொருட்கள் துணை அமைச்சர் சித்தி அமினா அச்சிங் தெரிவித்தார்.

மற்ற பொருட்களை போலவே, இயற்கை ரப்பரும் ஏற்றுமதி சார்ந்தது என்றும், அதன் விலை நிர்ணயம் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையே உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் உள்ளது என்றார். இது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்று மேலும் அவர் கூறினார்.

“சந்தையில் ரப்பரின் விலை குறைவாக இருக்கும் போது சிறு விவசாயிகளின் சுமையை அரசாங்கம் அறிந்திருக்கிறது. எனவே, அரசாங்கம், ரப்பர் உற்பத்தி ஊக்கத் தொகையின் அளவை ஒரு கிலோவுக்கு 20 செனாக  உயர்த்தி RM2.70 ஆக வழங்க  ஒப்புக் கொண்டுள்ளது.

“பட்ஜெட் 2023 இல் அறிவிக்கப்பட்ட ரிம 350 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது” என்று இன்று நாடாளுமன்றத்தில் சித்தி அமினா கூறினார்.

ரப்பர் சிறு தோட்டக்காரர்கள்  வருமானத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் பாதிப்பைச் சரி செய்வதற்காக, ஸ்கிராப் ரப்பரின் அடிப்படை விலையை ஒரு கிலோவுக்கு RM3 ஆக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்பதை அறிய விரும்பும் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசன் சாத்தின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

ரப்பர் உற்பத்தி ஊக்கத்தொகை விலையின் அளவை தற்போது கிலோ ஒன்றுக்கு 3 ரிங்கிட் ஆக உயர்த்தினால் 2023ஆம் ஆண்டில் RM457 மில்லியன் அரசுக்கு தேவைப்படும் என சித்தி அமினா கூறினார்.

இந்தத் மேற்பட்ட தொகையானது 400,000 டன்கள் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது. மலேசியன் ரப்பர் தரம் 20 இன் சராசரி விலை கிலோ ஒன்றுக்கு RM6.10 உள்ளது.

– பெர்னாமா


Pengarang :