NATIONAL

பலாக்கோங்கில் இன்று அன்வார் திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சி- பாங்கி தொகுதி கே.கே.ஐ. ஏற்பாடு

காஜாங், மே 25- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வாழ்க்கையின்
வலி மிகுந்த வரலாற்றைச் சித்தரிக்கும் “அன்வார்-அன்டோல்ட் ஸ்டோரி“
(ANWAR-THE UNTOLD STORY) எனும் திரைப்படம் காஜாங் வட்டார
மக்களுக்காக இலவசமாக திரையிடப்படுகிறது.

இன்றிரவு 7.45 மணிக்கு பலாக்கோங், அமேரின் மால் சினிப்ளெக்ஸ்
திரையரங்கில் இடம்பெறவுள்ள இந்த இலவசச் சிறப்புக் காட்சிக்குப்
பலாக்கோங் தொகுதி இந்திய சமூகத் தலைவர் கிறிஸ்டி லுய்ஸ்
பிரான்சிஸ், சுங்கை ராமால் தொகுதி சமூகத் தலைவர் சிவக்குமார்
காஜாங் தொகுதி சமூகத் தலைவர் பி.ராஜ்குமார் ஆகியோர் ஏற்பாடு
செய்துள்ளனர்.

பிரதமர் அன்வாரின் வாழ்க்கை வரலாற்றை பொது மக்களும் கட்சி
உறுப்பினர்களும் தெரிந்து கொள்ளும் நோக்கில் பாங்கி நாடாளுமன்றத்
தொகுதிக்குட்பட்ட இந்த சட்டமன்றத் தொகுதிகள் சார்பில் இந்த சிறப்புக்
காட்சிக்கு தாங்கள் ஏற்பாடு செய்துள்ளதாகக் காஜாங் தொகுதி இந்திய
சமூகத் தலைவரான ராஜ்குமார் கூறினர்.

இந்த சிறப்புக் காட்சியைக் காண்பதற்கு 150 பேருக்கு வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. இணையம் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பதிவு
நடவடிக்கையில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டன என்று அவர்
குறிப்பிட்டார்.

இந்த திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்குப் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர்
ஷியாரெட்ஸான் ஜோஹான், காஜாங் சட்டமன்ற உறுப்பினரும்
ஆட்சிக்குழு உறுப்பினருமான ஹீ லோய் சியான், சுங்கை ராமால்
உறுப்பினர் மஸ்வான் ஜோஹார் ஆகியோர் சிறப்பு வருகை புரிவர்
என்றும் அவர் சொன்னார்.


Pengarang :