NATIONAL

சீ போட்டியில் மலேசியா மிக மோசமான அடைவுநிலையைப் பதிவு செய்துள்ளது

கோலாலம்பூர், மே, 25: 40 தங்கப் பதக்கங்கள் என்ற இலக்கு உடன் கம்போடிய சீ போட்டியில் களம் இறங்கிய மலேசியா 34 தங்கப் பதக்கங்களுடன் மட்டுமே நாடு திரும்பியது. இதன் மூலம் மலேசியா வரலாற்றில் மிக மோசமான அடைவு நிலையை பதிவு செய்துள்ளது. மேலும், பதக்கப் பட்டியலில் மலேசியப் ஏழாவது இடத்தைப் பிடித்திருப்பது மிகவும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மலேசியாவின் இந்த சரிவுக்குப் பல மோசமான காரணங்கள் உள்ளன என்று பெர்னாமா வின் முன்னாள் விளையாட்டு செய்தியாளர் திரு ஜெயராஜூ லெட்சுமணன் தெரிவித்தார்.

விளையாட்டு துறையில் மலேசியாவின் இந்த வீழ்ச்சிக்குப் பிறரைக் குறை கூறாமல், மீண்டும் இதுபோன்று நிகழாமல் இருக்க அதன் காரணத்தைக் கண்டறிய அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என ஜெயராஜூ லெட்சுமணன் கேட்டு கொண்டார். மேலும், அவ்வப்போது ஏற்படும் ஆட்சி மாற்றமும் இந்த சூழ்நிலை ஏற்பட ஒரு காரணமாக இருக்கலாம் என்றார். ஏனென்றால் குறிப்பிட்ட ஒரு முறையை பின்பற்ற கடினமாக உள்ளது என வருத்தம் தெரிவித்தார்.

மேலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு விளையாட்டு துறையில் ஈடுபட ஊக்கம் அளிக்க தவறுவதும் இது போன்ற சூழ்நிலை ஏற்பட காரணமாக அமைகின்றன.

ஆசியா அளவில் விளையாட்டு துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடும் செலவுகளும் செய்வதில் மலேசியா முதலிடம் வகிப்பதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், விளையாட்டு துறையில் நம் நாட்டின் அடைவுநிலை அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என மேலும் கருத்து தெரிவித்தார்.


Pengarang :