NATIONAL

வறட்சி காலத்தில் நீர் இறைப்பு பம்ப், ஆழ்துளை கிணறு அமைக்க வெ.400,000 ஒதுக்கீடு- முகமது சாபு தகவல்

பச்சோக், மே 30 – வறட்சி காலங்களில் தண்ணீர்
பிரச்சனைகளை சமாளிக்க நீர் இறைப்பு பம்புகள் மற்றும்
ஆழ்துளைக் கிணறுகளை அமைக்க கூடுதலாக 400,000
வெள்ளியை ஒதுக்கீடு செய்வதாக விவசாய மற்றும் உணவு
பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள நெல்
விவசாயிகளுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது
சாபு தெரிவித்தார்.

வெப்பமான வானிலை நெல் சாகுபடியை பாதிக்காத
வகையில் நாங்கள் தண்ணீர் பம்புகளை தயார்
செய்கிறோம் என்று நேற்று கம்போங் குபாங் தெலாகாவில்
நீர் இறைப்பு

பம்புகளை பார்வையிட்டப்பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் கூறினார்.

நீர் இறைப்பு பம்புகள் போதுமானதாக இல்லாத நிலை
ஏற்படும் பட்சத்தில், எதிர்காலத்தில் பொருத்தமான
நீர்ப்பாசன முறை செயல்படுத்தப்படும் வரை கூடுதலாக
பம்ப் கருவிகளை வழங்குவது பற்றி நாங்கள்
பரிசீலிப்போம் என்று அவர் சொன்னார்.

வெப்பமான காலநிலை மற்றும் வறட்சி காரணமாக காடா
எனப்படும் கெமுபு விவசாய மேம்பாட்டு வாரியத்தால்
நிர்வகிக்கப்படும் பகுதிகள் நீர் விநியோக பிரச்சனைகளை
எதிர்கொள்கின்றன. மேலும் கெமுபு பம்ப் ஹவுஸ் நீர்
இறைப்பு மையம் கோத்தா பாரு செலாத்தான், கோத்தா
பாரு உத்தராவில் உள்ள சில நெல் வேளாண் பகுதிகளுக்கு
நீர்ப்பாசனம் செய்ய முடியவில்லை என்று அவர்
தெரிவித்தார்.

வறட்சியின் காரணமாக நெல் பயிர்கள் அழிந்துவிடும்
சாத்தியத்தை கருத்தில் கொண்டு காடா வேளாண்
பகுதிகளில் உள்ள

அனைத்து விவசாயிகளுக்கும் கிட்டத்தட்ட 500 கையடக்க
பம்ப்களை தாங்கள் விநியோகித்துள்ளதாகவும் அவர்
கூறினார்.


Pengarang :