NATIONAL

ஆபத்து அவசர சேவை முன்னணி பணியாளர்களும் பங்குகொள்ளும் மலிவு விற்பனை 

ஷா ஆலம். மே 30: இன்று பண்டான் இண்டா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் பணிபுரியும் முன்னணி பணியாளர்களும் பங்கு கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மலிவு விற்பனையில் 500க்கும் மேற்பட்ட கோழிகள் விற்று தீர்ந்தன.

பண்டான் பகுதியில் உள்ள தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் சேவைகள் மற்றும் அர்பணிப்பை பாராட்டுவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும் என்று தெரதாய் தொகுதியின் உதவி ஒருங்கிணைப்பு அதிகாரி முகமட் ஃபிர்தௌஸ் பாஹ்ப் கூறினார்.

“கடமை மற்றும்  எப்பொழுதும்  அவசர சேவைகளின்  தயார் நிலையில் இருக்க வேண்டிய நிலையில்  அவர்கள் மலிவு  விலை  விற்பனையில் பங்கேற்பதற்கு  பல  தடைகள் உள்ளன. அதனால், நாங்கள் அவர்களின் இடத்தில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தோம்.

“வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு அனைத்து தரப்பினராலும் உணரப்படுகிறது, எனவே அவர்களின் நிதிச் சுமையைக் குறைக்க உதவுவதற்காக நாங்கள் அவர்களின் இடத்தில் இந்த சிறப்பு விற்பனையை ஏற்பாடு செய்தோம்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் போலீஸ் அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அமலாக்க அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய 400க்கும் மேற்பட்ட வருகையாளர்கள் கோழி, இறைச்சி மற்றும் அரிசி போன்ற பல்வேறு பொருட்களை மலிவான விலையில் பெறுவதற்கு காலை 8.30 மணி முதல் வருகை புரிய தொடங்கினர்.

உலு லங்காட் மாவட்டத்தைச் சுற்றியுள்ள முன்னணி ஊழியர்களுக்கும் சிறப்பு விற்பனை கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Pengarang :