SELANGOR

மெகா சாலை மேம்பாட்டு திட்டம் – உலு சிலாங்கூர் நகராண்மை கழகம்

ஷா ஆலம், மே 30: உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் அதன் அதிகார வரம்பில் உள்ள பகுதிகளில் மெகா சாலை மேம்பாட்டு திட்டத்தை மே 29 முதல் செயல்படுத்துகிறது.

அத்திட்டம் புக்கிட் பெருந்தோங் மற்றும் புக்கிட் செந்தோசாவைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியது என்று உள்ளூர் அதிகாரசபை (PBT) கூறியது.

“இந்த திட்டம் நான்கு கட்டங்களைக் கொண்டுள்ளது மற்றும் மே 29 அன்று மேம்பாடு செய்ய வேண்டிய இடங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆரம்ப தள வருகை நடத்தப்பட்டது.

“திட்டத்தின் முதல் கட்டம் பெர்சியாரன் சுங்கை சோவில் மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தை இன்பரசெல் செயல்படுத்துகிறது,” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் இந்த திட்டம் சாலைப் பயனாளர்களுக்குக் குறிப்பாக புக்கிட் பெருந்தோங் மற்றும் புக்கிட் செந்தோசாவில் வசிப்பவர்களுக்கு பயன் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

முன்னதாக, இந்த மாதம் முதல் மாநிலம் முழுவதும் சாலைகள் மேம்பாடு பணிகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் என உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகள் எஸ்கோ ஐ.ஆர் இஷாம் அசிம் தெரிவித்தார்.

இந்த RM50 மில்லியன் திட்டமானது ஆண்டு பட்ஜெட்  ஒதுக்கீடு RM500 மில்லியனில் உள்ளடக்கியது என்றார் அவர்.


Pengarang :