SELANGOR

ஆண்களுக்கான முடி திருத்தம் பயிற்சியில் 50 இளைஞர்கள் பங்கேற்பு

ஷா ஆலம், மே 31: கிள்ளான் நகராண்மை கழகம் (எம்பிகே)  மே 28 ல் நடத்திய  ஆண்களுக்கான முடி திருத்தம் பயிற்சியில் மொத்தம் 50 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

கிள்ளான் மாவட்டச் சமூக மேம்பாட்டு  திட்டத்தின் கீழ் இந்த ஒரு நாள் பயிற்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நோரைனி ரோஸ்லான் தெரிவித்தார்.

“கிள்ளான் மாவட்டத்தில் உள்ள சிகையலங்கார துறையில் தொழிலை கற்றுக் கொள்வதிலும் திறனை மேம்படுத்தவும் சமூகத்திற்கு உதவவும்,  இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது. மேலும், சிகையலங்கார துறையில் வருமானம் ஈட்ட விரும்பும் சமூகத்துக்கு இது மறைமுகமாக உதவலாம் என்றார் அவர்.

வால்டர் கல்லூரியைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்களால் கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது  என்று நேற்று கிள்ளான் நகராண்மை கழகம் தலைமையகத்தில் நடைபெற்ற மாதாந்திர நிறைவுக் கூட்டத்தில் பேசிய நோரைனி தெரிவித்தார்.

பிளாசா எம்பிகேயில் மேற்கொள்ளப்படும் அனைத்து சமூக நிகழ்ச்சிகளையும் கிள்ளான் குடிமக்களுக்காக நடத்துமாறு கிள்ளான் நகராண்மை கழகம் பரிந்துரைத்த தாகவும் அவர் கூறினார்.


Pengarang :