NATIONAL

பண்டார் பாரு பாங்கி தேசிய பள்ளியின் சபை கூடல் மையம் 50,000 வெள்ளி செலவில் புனரமைப்பு

ஷா ஆலம், மே 31- உலு லங்காட்டில் உள்ள பண்டார் பாரு பாங்கி தேசியப்
பள்ளியின் மாணவர் ஒன்று கூடும் சதுக்கத்தைச் சுங்கை ராமால்
சட்டமன்றத் தொகுதி 49,500 வெள்ளி செலவில் புனரமைப்புச் செய்தது.

சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் அந்த சதுக்கம் முழுவதும் தார்
மூலம் செப்பனிடப்பட்டதாகத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான்
ஜோஹார் கூறினார்.

மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரும் நோக்கில்
சுமார் நாற்பது ஆண்டுகள் பழைமை வாய்ந்த அந்த பள்ளியில் இந்த
சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது என்று அவர் சொன்னார்.

இந்த பள்ளி நாற்பது ஆண்டுகால பழைமை வாய்ந்தது. இதன் காரணமாக
இப்பள்ளியில் அதிக பழுதுகள் காணப்படுகின்றன. பள்ளியிலுள்ள சபை
கூடல் மையத்தை சீரமைக்க பள்ளி நிர்வாகத்தினர் என்னிடம் உதவி
கோரினர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ்
குத்தகையாளரை அமர்த்தி 49,500 வெள்ளி செலவில் அந்த சதுக்கத்தில்
தார் போடும் பணியை மேற்கொண்டோம் என அவர் தனது பேஸ்புக்
பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுங்கை ராமால் தொகுதியில் கல்வித் திட்டங்களுக்கு மேலும்
ஆக்கமூட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சீரமைப்பு பணி
மேற்கொள்ளப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

சிறு குத்தகைத் திட்டங்கள் வாயிலாக வட்டார பொருளாதாரத்திற்குப்
புத்துயிரூட்டும் நோக்கில் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் 2
கோடியே 80 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.


Pengarang :