NATIONAL

வெப்பக் காலத்தின் போது உணவு உட்கொள்வதில் முன்னெச்சரிக்கை  அவசியமா?

கோலாலம்பூர், மே, 31: மோசமான வெப்பக் காலத்தின் போது  சரியான உணவு முறையை பின்பற்றுவதும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அடங்கும்.  சூட்டைத் தணிக்கும் உணவுகளை உட்கொள்வதும்  அவசியமான ஒன்றாக விளங்குகிறது.

நாட்டில் வெப்ப அளவு அதிகமாக பதிவாகி வரும் நிலையில் மக்கள் போதுமான அளவு நீரை அருந்துவது வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்ப்பது அவசியமாகும். அதே வேளையில் இக்காலக்கட்டத்தில் உப்பு மற்றும் இனிப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என உணவியல் நிபுணர் மகேஸ்வரி லட்சுமணன் தெரிவித்தார்.

வெப்பம் அதிகம் பதிவாகி வரும் நிலையில் குளிர்ந்த நீரை அருந்துவது மிகவும் இதமாக இருக்கும். எனினும் இந்த வெப்பக் காலத்தில் அதிகமாக குளிர்ந்த நீரை அருந்துவது செரிமான பிரச்சனை மற்றும் நரம்பு மண்டப் பிரச்சனை போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகச் செய்தி பரவி வருகிறது. ஆனால், அத்தகைய தகவல்களில் உண்மையில்லை என்று மகேஸ்வரி லட்சுமணன் கருத்து தெரிவித்தார்.

மேலும், இனிப்பு பானங்களையும் காபி, டீ போன்றவற்றையும் தவிர்ப்பது சிறந்தது என அவர் குறிப்பிட்டார். இந்த வெப்பக் காலங்களில் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு அவற்றை அரைத்து இனிப்பு சேர்க்காமல் ஜூஸாக அருந்தலாம். எனக் கூறினார்.


Pengarang :