SELANGOR

வாகனம் நிறுத்தும் கட்டணமாக RM3.2 மில்லியன் வசூல்

ஷா ஆலம், மே 31: ஜனவரி 1 முதல் மே 25 வரை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள இடங்களில் வாகனம் நிறுத்தும் கட்டணமாக RM3.2 மில்லியன் வசூலித்துள்ளது.

அதில் ரிங்கிட் 1.2 மில்லியன் சிறப்பு வாகனம் நிறுத்தும் இடத்தின் மூலம் வசூலானது என அதன் தலைவர் டாக்டர் அனி அஹ்மட் தெரிவித்தார்.

“மாதாந்திர பாஸ் மூலம் RM146,000 மற்றும் குடியிருப்பாளர்களின் மாதாந்திர பாஸ்களில் இருந்து RM142,000 வசூலிக்கப்பட்டது.

“மேலும், வாகனம் நிறுத்தும் இடத்திற்கு இணையக் கட்டணம் வழி அம்பாங் ஜெயா மாநகராட்சி RM1.6 மில்லியன் ஈட்டியது,” என்று அவர் கூறினார்.

“Smart Selangor Delivery Unit (SSDU)“ மூலம் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு கட்டணமாக மொத்தம் RM1.7 மில்லியன் பெறப்பட்டது என்று நேற்று மெனாரா அம்பாங் ஜெயா மாநகராட்சியில் உள்ள உள்ளூர் அதிகாரசபையின் (PBT) மாதாந்திர முழு கூட்டத்தில் பேசிய அனி அஹ்மட் தெரிவித்தார்.


Pengarang :