SELANGOR

பெ.ஜெயா மாநகர் ஏற்பாட்டில் காக்கை சுடும் இயக்கம்- ஜூலை மாதம் நடைபெறும்

ஷா ஆலம், மே 31- வரும் ஜூலை 22 மற்றும் ஆகஸ்ட் 26 ஆகிய தேதிகளில்
மேற்கொள்ளப்படவிருக்கும் காக்கை சுடும் நடவடிக்கையில் பங்கேற்க மொத்தம் 40 துப்பாக்கி சுடும் வீரர்கள் இணையம் வாயிலாகப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 18 முதல் மே 17 வரை மேற்கொள்ளப்பட்ட பதிவு நடவடிக்கையின்
போது இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார்
முகமது அஷான் முகமது அமீர் கூறினார்.

இந்த காக்கை சுடும் இயக்கத்தில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள்
அடையாள அட்டையின் நகல், சமீபத்திய துப்பாக்கிச் சுடும் உரிம புத்தகம், வங்கி
கணக்கு புத்தகம் அல்லது வங்கி அறிக்கையின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

இங்குள்ள எம்.பி.பி.ஜே.தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற மாநகர் மற்றத்தின்
கூட்டத்திற்குத் தலைமை தாங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த காக்கை சுடும் இயக்கத்தை வெற்றியடையச் செய்வதற்கு தற்போது
நாங்கள் அரச மலேசிய போலீஸ் படையின் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளோம் என்று
அவர் கூறினார்.

சுடப்படும் ஒவ்வொரு காக்கைக்கும் மாநகர் மன்றம் 6.00 வெள்ளியை தருவதாக அவர்
மேலும் சொன்னார். கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இதே போன்ற நடவடிக்கையில் 916 காக்கைகள் சுடப்பட்ட வேளையில் அதற்கு கட்டணமாக 5,496 வெள்ளி வழங்கப்பட்டது என்றார் அவர்.


Pengarang :