SELANGOR

ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வு இனி ஆண்டுதோறும் நடத்தப்படும்

ஷா ஆலம், ஜூன் 1- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்பாடு செய்யப்படும் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் (ஜே.கே.எஸ்.பி.) திட்டம் மக்களை அணுகும் முயற்சியின் ஒரு பகுதியாக இனி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில அரசு வழங்கும் வசதி, வாய்ப்புகள் பற்றி சமூகம் அறிந்து கொள்ள இந்த உதவி
பயணத் தொடர் துணை புரிகிறது என்று மந்திரி புசார் கழகத்தின் (எம்பிஐ) தலைமை செயல்முறை அதிகாரி கூறினார்.

மாநில அரசுடன் மக்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் திட்டமாக இது விளங்குகிறது.
மாநில அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளை மக்களிடம் தெரிவிக்கவும் இது
உதவுகிறது என நோரித்தா முகமது சீடேக் தெரிவித்தார்.

சில நேரங்களில் மக்கள் மாநில அரசின் திட்டங்கள் குறித்து அறியாதவர்களாகவும்
உறுதியாக தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே, அரசின் திட்டங்கள்
குறித்து சமூகத்தின் அனைத்து நிலையிலான மக்களுக்கும் தெரிவிக்கும் நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

இன்று இங்குள்ள டாருல் ஏசான் கட்டிடத்தில் நடைபெற்ற ஜே.கே.எஸ்.பி பரிசு வழங்கும்
நிகழ்ச்சியின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் எம்பிஐ நிறுவன
சமூக கடப்பாட்டுப் பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனல் நோரும் கலந்து கொண்டார்.

ஐ.பி.ஆர். எனப்படும் பெடுலி ராக்யாட் திட்டத்தின் பேம்படுத்தப்பட்ட வடிவமாக
விளங்கும் இந்த ஜே.கே.எஸ்.பி. திட்டம் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி கிள்ளான் நகரில் தொடங்கப்பட்டு மார்ச் 19 அன்று சபாக் பெர்ணமில் முடிவடைந்தது.


Pengarang :