NATIONAL

இஸ்லாமிய புரிந்துணர்வுக் கழகக் கட்டிட கூரை இடிந்து விழுந்ததில் அறுவர் காயம்

கோலாலம்பூர், ஜூன் 1- இங்குள்ள மலேசிய இஸ்லாமிய புரிந்துணர்வுக்
கழகத்தின் (ஐ.கே.ஐ.எம்..) கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில்
அக்கழகத்தின் ஆறு ஊழியர்கள் லேசான காயங்களுக்குள்ளாயினர்.

இச்சம்பவம் தலைநகர் ஜாலான் துங்கு அப்துல் ஹலிம், லெங்கோக்
துங்குவிலுள்ள அந்த அக்கழகத்தின் பி புளோக்கின் பிரதான கூடத்தில்
நேற்று காலை 11.55 மணியளவில் நிகழ்ந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று காலை 11.56 மணியளவில் தாங்கள்
அவசர அழைப்பைப் பெற்றதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ
ஹர்த்தமாஸ் மற்றும் ஹங் துவா தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 15
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று அவர்
சொன்னார்.

நண்பகல் 12.13 மணிளவில் சம்பவ இடத்தை அடைந்த போது அந்த
கூடத்தின் கூரை முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளதை அவர்கள்
கண்டனர். அவ்விடத்தில் இருந்த 30 முதல் 50 வயது வரைலான ஆறு
பெண்கள் இச்சம்பவத்தில் காயமடைந்தனர் என்று அவர் அறிக்கை
ஒன்றில் தெரிவித்தார்.

காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காகக் கோலாலம்பூர்
மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தீயணைப்பு வீரர்களின் மீட்புப் பணி பிற்பகல் 12.51 மணியளவில்
முடிவுக்கு வந்ததாக கூறிய அவர், கூரை இடிந்து விழுந்த சம்பவம்
தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :