SELANGOR

ரஹ்மா மூக்கு கண்ணாடி திட்டம் அறிமுகம்

கோலாலம்பூர், ஜூன் 6: உணவு மெனுக்கள், உணவு கூடைகள், சிகிச்சைகள் மற்றும் மலிவு விற்பனையுடன் தொடங்கப்பட்ட பாயுங் ரஹ்மா திட்டம், இப்போது ரஹ்மா மூக்கு கண்ணாடி திட்டத்தை அறிமுகப்படுத்தி விரிவுபடுத்தி வருவதாக  உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் அயூப் தெரிவித்துள்ளார்.

“MOG Eyewear“ நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் மூலம், பொது மக்கள் RM50 முதல் RM100 வரையிலான விலையில் மூக்கு கண்ணாடிகளை வாங்கலாம். மேலும், லென்ஸ்களைப் ‘ப்ளூ கட் லென்ஸாக மேம்படுத்த RM100 மட்டுமே செலுத்த வேண்டும் என்று அதிகாரப்பூர்வ முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

“இந்த சலுகையை மலேசியாவில் உள்ள 96 “MOG Eyewear“ கிளைகளில் பெறலாம்” என்று அயூப் கூறினார்.

மலேசியர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப இன்னும் பல கவர்ச்சிகரமான சலுகைகளுடன் பாயுங் ரஹ்மா திட்டம் தொடரும் என்றார்.

– பெர்னாமா


Pengarang :