NATIONAL

புக்கிட் ராஜாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 70 பேர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்

ஷா ஆலம், ஜூன் 6- வெள்ளம் காரணமாக வெளியேற்றப்பட்ட கிள்ளான்,
புக்கிட் ராஜாவைச் சேர்ந்த 16 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேர் நேற்று வீடு
திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளம் வடியத் தொடங்கியதைத் தொடர்ந்து
அவர்கள் இல்லம் திரும்ப அனுமதிக்கப்பட்டதாக மலேசியப் பொது தற்காப்பு
படையின் மாநிலப் பேரிடர் மேலாண்மை செயலகம் கூறியது.

எனினும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில இடங்களில் இன்னும் நீர்
முழுமையாக வடியாமல் இருப்பதாக அச்செயலகம் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தது.

பண்டார் புக்கிட் ராஜா பள்ளிவாசலில் திறக்கப்பட்ட தற்காலிக வெள்ள
துயர் துடைப்பு மையம் கிள்ளான் மாவட்ட நில அலுவலகத்தின் அடுத்த
உத்தரவு வரும் வரை இன்று காலை முதல் தொடர்ந்து செயல்படும்
என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அதிகாலை 4.00 மணி தொடங்கி பெய்த அடை மழை
காரணமாகப் புக்கிட் ராஜா, மேரு, சுங்கை பூலோ உள்ளிட்ட பகுதிகளில்
திடீர் வெள்ளம் ஏற்பட்டது.


Pengarang :