NATIONAL

விளையாட்டு வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் மாநிலத்திற்கு அதிக  நிதி தேவை இருப்பதை  துணை அமைச்சர் ஒப்புக்கொண்டார்

ஷா ஆலம், ஜூன் 12: விளையாட்டு வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் மாநிலத்திற்கு அதிக  மானிய தேவை இருப்பதை  இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஒப்புக்கொள்வதாக துணை அமைச்சர் ஆடம் அட்லி அப்துல்லா ஹலீம் கூறினார்.

“சமீபத்தில்  மாநிலத்தில் பல விளையாட்டு தளங்களைப் பார்வையிட்ட போது புதிய விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கான  குறிப்பாக சிலாங்கூரில் அதிக தேவை இருப்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

அப்பகுதியில் உள்ள சில மோசமான விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கு மடாணி அரசு திட்டமிட்டுள்ளது குறித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவின் கூடுதல் கேள்விகளுக்குப் பதிலளித்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

சுல்தான் சுலைமான் மைதானம் மற்றும் பண்டமாறன் மைதானத்தை மேம்படுத்துவது தொடர்பான கணபதிராவ் கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்த வசதி இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மேற்பார்வையில் இல்லை, மாறாக கிள்ளான் நகராண்மை கழகம் (MPK) அல்லது மாநில அரசு கீழ் உள்ளது.

“எம்.பி.கே தகவலின்படி சுல்தான் சுலைமான் மைதானத்தை  மேம்படுத்தும் பணிகள் நிறைவடையும் நிலையில் நீச்சல் குளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

“இந்த இரண்டு வசதிகளையும் மேம்படுத்த அமைச்சகம் இன்னும் எண்ணம் கொண்டிருக்கவில்லை, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை மூலம் தற்போது உள்ள விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்க விண்ணப்பிக்கலாம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :