NATIONAL

அரசு ஊழியர்களின் திறனை மேம்படுத்த வெளிநாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில் சிறப்புப் பயிற்சி பெற அனுப்புவதற்கு அரசு தயார்

ஷா ஆலம், ஜூன் 13: அரசு ஊழியர்கள், குறிப்பாக இளைஞர்களின் துறை சார்ந்த தனித் திறன்களை மேம்படுத்த வெளிநாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில் சிறப்புப் பயிற்சி பெற அனுப்புவதற்கு அரசு தயாராக உள்ளது.

நடப்பில்  சில தொழில் நுணுக்க மிக்க துறைகளில்,  தொழில்நுட்ப  ஆலோசகர்களின் சேவைகள் பெறப்படுகிறது . அதற்கு அரசாங்கம் மிக உயர்ந்த கட்டணங்களை சேவைக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது.

இந்த செலவுகளை கட்டுப்படுத்த, அரசு பொது சேவை துறையுடன் (ஜேபிஏ) கலந்துரையாடியதன் மூலம் மாற்று வழிகளை கண்டறிந்துள்ளது. அதன்படி,  எதிர்காலத்தில்  இளம்  அரசு ஊழியர்களை  பணிக்கு அமர்த்துவதும்   தொழில் நுணுக்க மிக்க துறைகளில், அவர்களுக்கு  பயிற்சி வழங்குவதாகும்  என்று  பிரதமர் கூறினார்.

இதன் வழி அடுத்த  10 முதல் 15 வருடங்கள் முன்னோக்கி சிந்திப்பதன் மூலம் இளம் அரசு ஊழியர்களை தொழில் நுணுக்க மிக்க துறை வல்லுநர்களாக  உருவாக்க  முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். .

“அவர்களுக்கு நிறுவனங்களுடன் அல்லது வெளிநாடுகளில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட பயிற்சி தேவைப்பட்டால், கற்றுக்கொள்ளலாம். இது பொதுச் சேவையின் திறனைப் பயிற்றுவித்து நிலைப்படுத்தும். மற்ற விஷயங்களை காட்டிலும் இது சிறந்தது என்று நான் நினைக்கிறேன், “என்று அவர் கூறினார்.

இன்று, சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா கட்டிடத்தின் பேராக் ஜூபிலி மண்டபத்தில் சிலாங்கூர் அரசு ஊழியர்களுடனான பிரதமரின் சிறப்பு ஆணைக்குழு கூட்டத்தில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.

1,000க்கும் மேற்பட்ட சிலாங்கூர் அரசு ஊழியர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் கலந்து கொண்டார்.


Pengarang :