SELANGOR

புட்சால் திடல் நிர்மாணிப்பு, விளையாட்டு வசதிகள் மேம்பாட்டிற்கு உலு கிளாங் தொகுதி வெ.180,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜூன் 15- தாமான் மெலாவத்தி மற்றும் தாமான்
பெர்மாத்தாவில் இரு புட்சால் திடல்களை நிர்மாணிக்க உலு கிளாங்
சட்டமன்றத் தொகுதி 120,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இது தவிர, ஏயு2சி/6 பகுதியில் உள்ள புட்சால் திடல் மற்றும்
வடிகால்களையும் ஏயு2ஏ/14 பகுதியிலுள்ள பூப்பந்து திடலையும்
சீரமைப்பதற்கு 60,000 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக உலு கிளாங் தொகுதி
சேவை மையத்தின் நிர்வாகி முகமது ஹெல்ம்சான் அப்துல் கரிம்
கூறினார்.

தாமான் மெலாவத்தி மற்றும் தாமான் பெர்மாத்தாவில் தலா 60,000
வெள்ளி செலவில் இவ்விரு புட்சால் திடல்களும் நிர்மாணிக்கப்படும்
என்றும் அதன் நிர்மாணிப்பு பணிகள் வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதி
முற்றுப் பெறும் என்றும் அவர் சொன்னார்.

பூப்பந்து மைதானம் 20,000 வெள்ளி செலவிலும் புட்சால் திடல் மற்றும்
வடிகால்கள் 40,000 வெள்ளி செலவிலும் சீரமைப்பு செய்யப்படும் என்று
அவர் மேலும் குறிப்பிட்டார்.

தாமான் மெலாவத்தி மற்றும் தாமான் பெர்மாத்தா ஆகிய குடியிருப்பு
பகுதிகளில் புட்சால் இல்லாது தொடர்பில் பொது மக்கள் முன்வைத்த
கோரிக்கையின் அடிப்படையில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது
என்றார் அவர்.


Pengarang :