SELANGOR

உரிமம் இல்லாமல் இயங்கிய தொழிற்சாலைக்கு அபராதம் விதிக்கப்பட்டது – கிள்ளான் நகராண்மை கழகம்

ஷா ஆலம், ஜூன் 15: கிள்ளானில் உள்ள தாமான் செந்தோசா, லோரோங் லக்சமனா 31டி அருகே, பிளாஸ்டிக்  தொழிற்சாலை ஒன்றுக்கு உரிமம் இல்லாமல் இயங்கியதற்காகக் அபராதம் வழங்கப்பட்டது.

கடந்த செவ்வாய்கிழமை இந்த வளாகத்தில் இருந்து எழும் சத்தம் குறித்து பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களை அடுத்து கிள்ளான் நகராண்மை கழகம் சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.

“சோதனையின் முடிவில் அந்த வளாகத்திற்குப் செல்லுபடியாகும் உரிமம், திட்டமிடல் அனுமதி மற்றும் ஆக்கிரமிப்பிற்கான தகுதி சான்றிதழ் இல்லை” என்று எம்.பி.கே முகநூல் மூலம் தெரிவித்தது.

அதே சோதனை நடவடிக்கையின் போது, ஜாலான் அஸ்தகா 5/ ku 2, பண்டார் புக்கிட் ராஜா, கிள்ளான் எனும் இடத்தில் கார் கழுவும் நடவடிக்கை மேற்கொள்ளும் வளாகத்திற்கும் அதே குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

“உரிமம் இல்லாமல் செயல்படும் வளாகத்தால், பின்புறம் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அபராதம் வளாகப் பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்றார்.

இரண்டு வளாகங்களுக்கும்) வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில்துறை உரிமம் (UUK3 PTPP MPK)  உட் பிரிவின்  கீழ் அபராதம் வழங்கப்பட்டன.


Pengarang :