SELANGOR

விவசாயத் துறைக்கு மாநில அரசு அளித்துள்ள நிதி உதவி தொழில் முனைவோரின் ஆர்வத்தை தூண்டியுள்ளது

ஷா ஆலம், ஜூன் 16: விவசாயத் துறைக்கு மாநில அரசு அளித்துள்ள நிதி உதவி, விவசாய தொழில்முனைவோர் தொடர்ந்து அவரவர் தொழிலை மேம்படுத்தும் ஆர்வத்தைத் தூண்டியது.

குய்ஹ் லோயாங் விற்கும் 51 வயதான ஹைருடின் சுதிர்மான், அவர் பெற்ற RM20,000 ஒதுக்கீடு பல்வேறு வகையான தயாரிப்புகளை பன்முகப்படுத்த வாய்ப்பு வழங்கும் என்றார்.

“இந்த ஊக்கத் தொகையைப் பெற்றதற்கு நன்றி. இதற்குப் பிறகு, இளம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பாண்டன் மற்றும் சீஸ் சுவையுடைய டின் கேக்குகளை நான் செய்ய விரும்புகிறேன்.

“குய்ஹ் லோயாங்கை நான் தொடர்ந்து அறிமுகப்படுத்த விரும்புகிறேன், ஏனெனில் இது எங்கள் பாரம்பரிய பலகாரம்” என்று செகின்சானைச் சேர்ந்த வேளாண் சுற்றுலாத் தொழிலதிபர் கூறினார்.

இதற்கிடையில், RM15,000 ஊக்கத்தொகை, தயாரிப்பு உற்பத்தி திறனை அதிகரிக்க பயன்படுத்தப்படும் என்று 50 வயதான நோர்லியா ஹாஷிம் கூறினார்.

சம்பல் விற்கும் வியாபாரத்தை நடத்தி வரும் அவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது தயாரிப்பு முதன்முதலில் சந்தைப்படுத்தப் பட்டதில் இருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்றார்.

“நான் உற்பத்தியை அதிகரிக்க விரும்புகிறேன், ஏனென்றால் நான் அதை கைமுறையாக மட்டுமே செய்கிறேன். அதனால், வணிகத்திற்கு உதவும் இயந்திரங்களை வாங்க விரும்புகிறேன்.

“தற்போது நான் கடை நடத்தி வருகிறேன், ஆனால் சம்பல் மற்றும் பிற உணவுகளைச் சமைக்க கைமுறை முறையைப் பயன்படுத்துகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று நவீன விவசாயம் மற்றும் வேளாண் அடிப்படை தொழில்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் வழங்கிய ஊக்கத்தொகையை 2,000 விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் கீழ் நிலை விவசாயிகள் (ஐஏ.டி.) பெற்றனர்.

கடந்த ஆண்டு RM2 மில்லியனாக இருந்த வருடாந்த ஊக்கத்தொகை இந்த ஆண்டு RM3.55 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


Pengarang :