SELANGOR

டிங்கி சம்பவங்களைக் குறைக்க துப்புரவு பணி – ஐந்து குடியிருப்பாளர் சங்க பிரதிநிதிகள் 

சுபாங் ஜெயா, ஜூன் 16: டிங்கி சம்பவங்கள் அதிகரிப்பைத் தொடர்ந்து, ஜூன் மாதம் முழுவதும் சுபாங் ஜெயா நகராண்மை கழகத்தின் (MBSJ) கீழ்  உள்ள மொத்தம்  ஐந்து குடியிருப்பாளர் சங்கத்தை பிரதிநிதிக்கும்  (MPP) குடியிருப்பாளர்களுடன் சேர்ந்து துப்புரவு பணி மேற்கொள்ளவுள்ளனர்.

ஜூன் 10ஆம் தேதி வரை மொத்தம் 3,511 டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 1,489 சம்பவங்கள் மட்டும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது என சுபாங் ஜெயா மேயர் முகமட் பௌசி யாதிம் கூறினார்.

“துப்புரவு பணியை நடத்துமாறு எம்பிபியிடம் சுபாங் ஜெயா நகராண்மை கழகம் கேட்டுக் கொண்டது, குறிப்பாக அதிக டிங்கி சம்பவங்கள் பதிவாகி உள்ள பகுதிகளில் ஆகும்.

சுபாங் ஜெயா நகராண்மை கழகத்தின் மாதாந்திர கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் தங்கள் சுற்றுப்புற பகுதிகள் ஏடிஸ் இனப் பெருக்கம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய சமூகத்தின் ஒத்துழைப்பும் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

“பொதுமக்கள் வாரத்திற்கு ஒருமுறை குறைந்தது 10 நிமிடங்களாவது ஏடிஸ் கொசு இனப்பெருக்கம் செய்யும் இடங்களைத் தேடி அழிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது ஏரோசோல் தெளிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :