SELANGOR

இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே மாதவிடாய் பிரச்சனையை நிவர்த்தி செய்ய RM100,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜூன் 19: விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதன் மூலம் மாநிலத்தில் உள்ள ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 1,000 ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் பயனடைவார்கள்.

ஆறு மாதங்களாக RM100,000 ஒதுக்கீடு உடன் இயங்கி வரும் இந்த முன்னோடித் திட்டம் பெண் மாணவர்களின் மாதவிடாய் பிரச்சனையை நிவர்த்தி செய்யும் வகையில் உள்ளது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“இந்த திட்டம் சுமுகமாக நடந்தால், அடுத்த ஆண்டு அதை RM200,000 ஆக விரிவுபடுத்துவோம், ஏனெனில் இத்திட்டம் ஒரு சுயச் சேவை இயந்திர மூலம் செயல்படுத்தப்படும்.

“இந்த சுயச் சேவை இயந்திரம் பயன்படுத்தும் முறை தவறாகப் பயன்படுத்தப் படலாம் அல்லது சேதமடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதனால் அதன் முடிவை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.

எனவே சம்பந்தப்பட்ட மாணவர்கள் அடையாளம் காணப்படுவார்கள் அல்லது பள்ளியால் பரிந்துரைக்கப் படுவார்கள்” என்று அவர் நேற்று டேவான் ராஜா மூடா மூசாவில் தெகாட் பெண்டிகன் கித்தா சிலாங்கூரை அறிமுகப்படுத்திய பின்னர் இவ்வாறு கூறினார்.

இந்த முன்னோடித் திட்டத்தில் சுங்கை துவா இடைநிலைப்பள்ளி, கோம்பாக்; புக்கிட் கூடா, கிள்ளான் இடைநிலைப்பள்ளி (பெண்கள்); காப்பார் இடைநிலைப் பள்ளி, கிள்ளான்; புத்ரா பெர்டானா இடைநிலைப்பள்ளி, சிப்பாங் மற்றும் கோலா சிலாங்கூர் இடைநிலைப்பள்ளி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சிலாங்கூர் பட்ஜெட் 2023யில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்குதல் உட்பட பெண்களுக்கு உரிமை அளிக்க RM200,000 ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒதுக்கீடு சிலாங்கூரை இலவச சானிட்டரி நாப்கின் திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக திகழ செய்கிறது.


Pengarang :