NATIONAL

தென் மியன்மாரை மிதமான நிலநடுக்கம் உலுக்கியது

யாங்கூன், ஜூன் 19 – தெற்கு
மியான்மாரில் உள்ளூர் நேரப்படி
இன்று காலை 8.10 மணியளவில்
ரிக்டர் கருவியில் 5.1 எனப் பதிவான
நிலநடுக்கம் ஏற்பட்டதாக
அந்நாட்டின் வானிலை மற்றும்
நீரியல் துறை (டி.எம்.எச்.)
அறிவித்துள்ளது.

நிலநடுக்கம் அயர்வாடி
பிராந்தியத்தின் பியாபோன்
நகரத்திலிருந்து தென்கிழக்கே 70
மைல் தொலைவில் மையமிட்டிருந்ததாக இருப்பதாக
அது தெரிவித்தது.

நிலநடுக்கத்தின் காரணமாகச் சுனாமி
ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள்
எதுவும் இல்லை என்று டி.எம்.எச்.
பூகம்பப் பிரிவின் துணை இயக்குநர்
யின் மியோ மின் ஷின் ஹூவா
செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ,
பொருள்சேதமோ ஏற்படவில்லை
என்றும் அவர் கூறினார்.

யாங்கோன் பிராந்தியத்தின் சில
நகரங்களில் வசிப்பவர்கள் தாங்கள்
லேசான நடுக்கத்தை உணர்ந்ததாகத்
தெரிவித்தனர்.

10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட
நிலநடுக்கம், முதலில் 15.5 டிகிரி
வடக்கு அட்சரேகையிலும் 96.33
டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும்
தீர்மானிக்கப்பட்டது.


Pengarang :