ANTARABANGSA

சூடாகும் ஐரோப்பா- வெப்ப அலைக்குக் கடந்தாண்டில் 16,000 பேர் பலி

லண்டன், ஜூன் 20- அண்மைய பல ஆண்டுகளாகத் இதர கண்டங்களை விட
ஐரோப்பா அதிக உஷ்ணமடைந்து வருகிறது. உலகின் சராசரி வெப்ப
நிலையுடன் ஒப்பிடுகையில் ஐரோப்பாவில் வெப்ப நிலை இரண்டு மடங்கு
அதிகரித்துள்ளதாக உலக வானிலை அமைப்பு கூறுகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளாக உலகில் வெப்ப நிலை தொடர்ச்சியாக
அதிகரித்து அதிக உஷ்ணம் பதிவான காலக்கட்டமாக ஆகியுள்ளதாக
2022ஆம் ஆண்டிற்கான தேசியப் பருவநிலை அறிக்கையை மேற்கோள்
காட்டி அனாடோலு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகில் தொடர்ச்சியான ஐந்தாவது வெப்பம் நிறைந்த ஆண்டாக 2022ஆம்
ஆண்டு விளங்குகிறது. உலகின் பல பிராந்தியங்களில் எப்போதும்
இல்லாத அளவுக்கு வெப்ப நிலை அதிகரிப்பைக் கண்டுள்ளது.
ஐரோப்பாவை பொறுத்த வரை கடந்த 2021ஆம் ஆண்டில் பதிவான 0.3-0.4
செல்சியஸ் வெப்பத்தை விட அதிகப்பட்ச வெப்ப நிலையை எதிர்
கொண்டுள்ளது.

இங்கிலாந்து உள்பட மேற்கு ஐரோப்பா கண்டத்தை முதன் முறையாக 40
டிகிரி செல்சியஸ் அளவில் சுட்டெரிக்க்கும் வெப்பம் வாட்டி வதைக்கிறது.
இது தவிர, ஐரோப்பிய கடல் பகுதி முழுவதும் அதிகப் பட்ச வெப்ப நிலை
தொடர்ச்சியாக நீடித்து வருகிறது.

கடந்தாண்டில் வெப்பம் சார்ந்த பிரச்சனைகளால் 16,000 பேர்
உயிரிழந்துள்ளனர். அவர்களில் 99.6 விழுக்காட்டினர் வெப்ப அலை
காரணமாக உயிரிழந்தவர்களாவர்.

கடந்த 1993 முதல் 2022 ஆம் ஆண்டு வரை உலகில் கடல் மட்டம் 9.7
சென்டி மீட்டர் (3.9 அங்குலம் ) உயர்வு கண்டுள்ளது.


Pengarang :