SELANGOR

இலவசச் சுகாதாரப் பரிசோதனை திட்டம் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து தொடரும்

ஷா ஆலம், ஜூன் 21: மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள இலவசச் சுகாதாரப் பரிசோதனைத் திட்டம் எதிர்காலத்தில் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் (என்ஜிஓக்கள்) இணைந்து, மேற்கொள்ளப்படும்.

எதிர்காலத்தில் சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஈடுபாடு இல்லாமல் கூட்டு மேலாண்மை அமைப்பை (JMB) ஈடுப்படுத்தவுள்ளதாகப் பொது சுகாதாரத் துறை பொறுப்பு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் தெரிவித்தார்.

” மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின்படி இந்த திட்டம் இயங்கியது, ஆனால் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படவுள்ளதால் செல்கேர் இத்திட்டத்தை மற்ற தரப்புகளுடன் இணைந்து தொடரும்.

“இந்த திட்டம் அவசியம், ஏனெனில் இது சமூகத்திற்குப் பெரும் நன்மைகளை வழங்குகிறது. எனவே குடியிருப்பாளர்கள் இலவசச் சுகாதார பரிசோதனை செய்து கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

சிலாங்கூர் ஸ்கிரீனிங் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் குடியிருப்பாளர்களுக்கு நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது.


Pengarang :