SELANGOR

சைபர் ஜெயா மற்றும் கிள்ளான் நகரைச் சுற்றி உள்ள பகுதிகளில் பெரிய அளவிலான சாலை மேம்பாடு பணி தொடரும்

ஷா ஆலம், ஜூன் 20: சைபர் ஜெயா மற்றும் கிள்ளான் நகரைச் சுற்றி உள்ள பகுதிகளில்  ஜூன் 15 முதல் இரண்டு நாட்களுக்கு இன்ஃப்ராசெல் மூலம் பெரிய அளவிலான சாலை மேம்பாடு பணி மேற் கொள்ளப்படுகிறது.

இந்த நடவடிக்கை கடந்த மாதம் முதல் மாநில நிர்வாகம் தீவிரமாகச் செயல்படுத்தி வரும் மெகா சாலை மேம்பாடு திட்டத்தின் ஒரு பகுதியாகும் என ட்விட்டரில் மாநிலச் சாலை பராமரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

“மில் மற்றும் பேவ்’ (சேதமடைந்த பாதையின் மேற்பகுதியை அகற்றி, புதிய லேயரை பதித்தல்).

முறையைப் பயன்படுத்தி பெர்சியாரான் அபெக் சைபர் ஜெயா வில் உள்ள சாலையை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப் படுகிறது.

“பண்டார் பார்க்லேண்ட்ஸ் கிள்ளானில் உள்ள பெர்சியாரான் டெலிமா 1 மற்றும் டெலிமா 2 இல் ‘ஓவர்லே’ முறையைப் பயன்படுத்தி சாலை மேம்பாடு பணி செயல்படுத்தப்படும்,” என்று இன்ஃப்ராசெல் தெரிவித்தது.

மே 16 அன்று, ஒட்டுமொத்த பொது மக்களின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் RM50 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்பட்ட திட்டம் வெற்றியடைந்ததாக உள்கட்டமைப்பு துறையின் பொறுப்பு உறுப்பினர் இஷாம் அசிம் தெரிவித்தார்.

அனைத்து மாநில சாலைகளையும் நிர்வகிக்க ஒவ்வொரு ஆண்டும் 500 மில்லியன் ரிங்கிட் நிதியுடன் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் அவர் விளக்கினார்.


Pengarang :