SELANGOR

வெள்ளம் காரணமாகப் பழுதடைந்த சாலையைச் சீரமைக்க வெ.800,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜூன் 20- வெள்ளம் காரணமாக கோல சிலாங்கூர், கம்போங்
பெஸ்தாரி ஜெயா, ஜாலான் லோரோங் மாவார் 6இல் ஏற்பட்ட சேதம்
பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த
சாலை பயன்படுத்த முடியாத அளவுக்குக் கடுமையாகச் சேதமடைந்தது.

போக்குவரத்துக்குப் பிரதான வழியாக விளங்கிய இந்த சாலை பழுதடைந்த
காரணத்தால் பெஸ்தாரி ஜெயா வட்டார மக்கள் பெரும் சிரமத்தை
எதிர்நோக்கி வந்தனர்.

மாநில அரசின் 800,000 வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் இந்த சாலை
மறுசீரமைப்பு செய்யப்பட்டதாகப் பெர்மாத்தாங் தொகுதி உறுப்பினர்
ரோசானா ஜைனால் அபிடின் கூறினார்.

கடந்தாண்டு ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் ஜாலான் லோரோங்
மாவார் 6 கடுமையாக பாதிப்புக்குள்ளானது. இந்த சாலை
சீரமைக்கப்பட்டதன் மூலம் பெஸ்தாரி ஜெயா மக்கள் இதுநாள் வரை எதிர்
நோக்கி வந்த போக்குவரத்துப் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது என்றார்
அவர்.

கும்புலான் செமஸ்தா சென். பெர்ஹாட் நிறுவனம் மூலம் இந்த
சாலையைச் சீரமைப்பதற்கான பொறுப்பைக் கோல சிலாங்கூர் மாவட்ட
மன்றம் பொதுப்பணித் துறைக்கு வழங்கியிருந்தது.


Pengarang :