SELANGOR

மினி ஷோகேஸ் மற்றும் லெபாக் செனி கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது – ஷா ஆலம் மாநகராட்சி

ஷா ஆலம், ஜூன் 20: ஜூன் 17 ஆம் தேதி, ஐ-சிட்டி ஷாப்பிங் சென்டரில் ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) ஏற்பாடு செய்த மினி ஷோகேஸ் மற்றும் லெபாக் செனி கலை நிகழ்ச்சி கலகலப்பாக நடைபெற்றது.

கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்புத் துறையானது கலை மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களைத் தொடர்ந்து அறிவித்து படைப்பாற்றல் மிக்கவர்களுக்கு இதில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்குகிறது.

“இந்தத் திட்டம் பொதுமக்கள் ஷா ஆலமிற்கு வருகை புரிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன் மூலம் இந்த நகரத்தை சிலாங்கூரில் கலை நகரமாக மாற்றும் இலக்கை அடைய முடியும்” என்று இன்று ஓர் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இந்திய, சீன பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோக்கள், குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் நிகழ்ச்சிகள், முக ஓவியம், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

மேலும், துணை மேயர் செரெமி தர்மன், சமூக மேம்பாட்டுத் துறை இயக்குநர் ஷாஹ்ரின் அகமது உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும், உள்ளூர் அதிகார சபை, ஷா ஆலம் நடமாடும் கவுண்டர் மூலம் சாலைப் போக்குவரத்து அபராதத்திற்கு 30 சதவிகிதம் குறைப்பு வழங்கியது.


Pengarang :