SELANGOR

நுழைவாயில் கோபுரத்தை  சரி செய்ய RM30,000 ஒதுக்கீடு – பலகோங் தொகுதி

ஷா ஆலம், ஜூன் 21: செராஸ், கம்போங் பாரு பத்து 11ல் உள்ள நுழைவாயில் கோபுரத்தை சரி செய்ய பலகோங் தொகுதி RM30,000 ஒதுக்கீடு செய்துள்ளது.

சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் (PSP) 2023 இன் கீழ் மிக பழமையான, பொழிவு இழந்த  நுழைவாயில் உள்ள  கோபுரத்தை மாற்றுவது அவ்விடத்திற்கு பிரகாசத்தையும் புதிய தோற்றத்தையும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என அதன் பிரதிநிதி வோங் சியூ கி கூறினார்.

“எட்டு வருடங்களான அந்த நுழைவாயில் இப்போது பொழிவிழந்த நிலையில் காணப்படுவதாக பல புகார் கடிதங்கள் வந்தன. மேலும்  சட்டவிரோத விளம்பர ஸ்டிக்கர்களால் நிரப்பப்பட்டுள்ளது.

“எனவே, பலகோங் தொகுதியில் உள்ள நாங்கள் இந்த ஆண்டிற்கான PSP ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி இந்த நுழைவாயிலைச் சரிசெய்து மீட்டமைக்க முயற்சி எடுத்தோம்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

கடந்த ஜூன் மாதத் தொடக்கத்தில் மேம்படுத்தும் செயல்முறை தொடங்கி அப்பணியையை நிறைவு செய்ய ஒரு வாரம் ஆனது என்று  சியூ கி கூறினார்.

“இந்த முயற்சியானது பாலாகோங்கில் உள்ள முழு கிராமத்திற்கும் ஒரு புதிய தோற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நம்புவதோடு எந்த ஒரு தனிநபரும் இந்த நுழைவாயிலைச் சேதப்படுத்த மாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :