NATIONAL

15 ஆண்டு அடைவு நிலையைக் கருத்தில் கொண்டு முடிவெடுப்பீர்- வாக்காளர்களுக்கு மந்திரி புசார் வேண்டுகோள்

ஷா ஆலம், ஜூன் 21- விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில்
திரண்டு வந்த வாக்களிப்பதன் மூலம் தங்களின் ஜனநாயகக் கடமையை
நிறைவேற்றும்படி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மாநில
மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாநில அரசு நிர்வாகத்தின் அடுத்தக் கட்ட இலக்கையும் மக்களின்
எதிர்காலத்தையும் தீர்மானிப்பதற்கு இந்நடவடிக்கை முக்கியமானதாக
விளங்குகிறது என்று அவர் சொன்னார்.

மக்களின் நலன் கருதியும் கடந்த காலங்களில் ஆற்றிய சிறந்த
சேவையின் அடிப்படையிலும் சிறப்பான தேர்வை செய்யும்படி
வாக்காளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

நான் எனது சேவைகளைத் தரவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில்  முன்வைக்கிறேன். பொதுமக்கள் பகுத்தாய்வு செய்து சிறந்த மற்றும் தங்களுக்கு நன்மை
செய்யக்கூடியவர்கள் என கருதுவோரை தேர்ந்தெடுப்பர் என நம்புகிறேன்
என்றார் அவர்.

உங்கள் ரசனை மற்றும் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யுங்கள்.
அதேவேளையில் ஓராண்டு அல்ல, மாறாக 15 ஆண்டு காலத்தில்
சிறப்பான அடைவு நிலையின் வாயிலாகப் புரிந்த சாதனைகளையும்
ஒப்பிட்டு பாருங்கள் என அவர் தெரிவித்தார்.

நேற்றிரவு சிலாங்கூர் டிவியின் டிக் டாக் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் கூறினார்.

ஒவ்வொரு நிர்வாகத்தின் சாதனை மற்றும் அடைவு நிலையை நியாயமான கால அவகாசத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அமிருடின் குறிப்பிட்டார்.


Pengarang :