ANTARABANGSA

இந்தோனேசியாவின்  கிழக்கு கலிமந்தான் மகாகம் உலு மாவட்டத்தில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

ஜகார்த்தா, ஜூன் 21 – செவ்வாய்க்கிழமை இந்தோனேசியாவின் கிழக்கு கலிமந்தனில் உள்ள மகாகம் உலு மாவட்டத்தில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் மையம் மாவட்டத்தின் தென்கிழக்கே 47 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது என நாட்டின் புவி இயற்பியல் நிறுவனமான பிஎம்கேஜி தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம் கிழக்கு இந்தோனேசிய நேரப்படி பிற்பகல் 1.43 மணியளவில் ஏற்பட்டது. மகாகம் உலு மற்றும் சமரிண்டா பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதுவரை உயிர் சேதமோ, சொத்து சேதமோ ஏற்பட்டதாகத் தகவல்கள் ஏதும் இல்லை.

மஹாகம் உலு மாவட்டம் சரவாக், மலேசியா மற்றும் போர்னியோ தீவின் இந்தோனேசியப் பகுதிகளில் ஒன்றான கிழக்கு கலிமந்தனுக்கு இடையேயான எல்லைக்கு அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

– பெர்னாமா


Pengarang :