SELANGOR

பதுக்கி வைத்திருந்ததாக நம்பப்படும் 13,802 லிட்டர் மானிய விலை டீசல் பறிமுதல் – சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு

ஷா ஆலம், ஜூன் 21:இங்குள்ள செக்க்ஷன் 22யில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பதுக்கி வைத்திருந்ததாக நம்பப்படும் மொத்தம் 13,802 லிட்டர் மானிய விலை டீசலை ஜூன் 19 அன்று சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN)  பறிமுதல் செய்தது.

இரவு 10.30 மணியளவில் நடந்த சோதனை நடவடிக்கையில், ராயல் மலேசியன் காவல்துறை (PDRM) உடன் இணைந்து மூன்று லாரிகள் சம்பந்தப்பட்ட சட்டவிரோத டீசலைப் பதுக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதில் அவரது தரப்பு வெற்றி பெற்றது என தலைமை அமலாக்க அதிகாரி முகமட் கைரி ஜமாலுடின் கூறினார்.

“எரிபொருள் நிலையத்தைச் சுற்றியுள்ள சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்புவதற்கு ஒரு நாளைக்கு ஆறு முதல் பத்து முறை வரை எரிபொருளை நிரப்புவது அவர்களின் செயல்பாடாகும்.

இன்று சிலாங்கூர் KPDN அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், “நான்கு ஆண் லாரி ஓட்டுநர்கள் மற்றும் பெட்ரோல் நிலைய ஊழியர் ஒரு வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டனர்” என்று அவர் கூறினார்.

10,000 லிட்டர் மற்றும் 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் சேமிப்பு தொட்டிகள் நிறுவியதன் மூலம் மாற்றியமைக்கப்பட்ட இரண்டு லாரிகளையும் அவரது தரப்பு பறிமுதல் செய்தது என முகமட் கைரி கூறினார்.

அதுமட்டுமில்லாமல் நான்கு யூனிட் எரிபொருள் சேமிப்பு தாங்கிகளுடன் லாரி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக அவர் மேலும் கூறினார்

“மொத்த பறிமுதல் மதிப்பு RM250,000 அதாவது 13,802 லிட்டர் எரிபொருள் (RM29,674), RM20,000 பணம் மற்றும் மூன்று லாரிகள் ஆகும்,” என்று அவர் கூறினார்.

250 லிட்டருக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு டீசலை விற்பனை செய்ததற்காக வழங்கல் கட்டுப்பாடு சட்டம் 1961 இன் விதிமுறை 21 (1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்று முகமட் கைரி மேலும் கூறினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு RM1 மில்லியன் வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப் படலாம் என்று அவர் கூறினார்.


Pengarang :