SELANGOR

ரவாங்கைச் சுற்றுலாத் தலமாக மாற்ற எண்ணம் – பிரதிநிதிகள்

ஷா ஆலம், ஜூன் 22: ரவாங்கைச் சுற்றுலாத் தலமாக மாற்ற அதன் பிரதிநிதிகள் விரும்புவதற்கு வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் இயற்கை அழகுகள் நிறைந்த அப்பகுதியின் தனித்துவமும் ஒரு காரணமாகும்.

இப்பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு நோக்கம் கொண்டுள்ளது. இங்குள்ள மக்களுக்கு நன்மைகளை வழங்குவதற்கும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான கூடுதலாகத் தொழில்துறை தொடர்ந்து வளர்ச்சியடைவதை உறுதி செய்வதற்கும் ஆகும் என அவர் விளக்கினார்.

“ரவாங் தனித்துவமானது, ஏனென்றால் 1908 ஆம் ஆண்டு முதல் நிலக்கரி சுரங்க பத்து அரங்கில் உள்ளது, அங்கு சுற்றுலாப் பயணிகள் சுரங்கங்கள், புகைபோக்கிகள் என பல சுரங்க நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டவையைப் பார்வையிட முடியும்.

“உத்தான் ரிம்பா டெம்பிள்ர், காஞ்சிங் சுற்றுச்சூழல் வனப் பூங்கா மற்றும் சிலாங்கூர் ஃபுருட் வேலி போன்ற சுற்றுச்சூழல் சுற்றுலாப் பகுதிகள் இங்கு உள்ளன.  அவை குறிப்பாக வார இறுதி நாட்களில் சுற்றுலா தலங்களாக மாறுகின்றன,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக அந்த பகுதியில் உள்ள மோசமான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சுற்றுலா சிலாங்கூருக்கு ஒரு பரிந்துரையை சமர்ப்பிக்க விரும்புவதாக வெய் கியாட் விளக்கினார்.

மற்ற வனப் பூங்காக்கள் உடன் ஒப்பிடும் போது இங்குள்ள வசதிகள் முழுமையாக இருந்தாலும், அவை பாழடைந்து காணப்படுவதோடு, பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருப்பதால் சில சேதமடைந்து காணப்படுகிறது. ஆகவே, தேவையற்ற சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க இந்தப் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு பரிந்துரைக்கிறோம், என்றார்.

ரவாங் பாரம்பரிய இந்திய உணவகங்களைக் கொண்டிருப்பதோடு, குறிப்பாக தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, ஷாப்பிங் செய்ய  பேராக் தஞ்சோங் மாலிம்,  போன்ற வடக்கு  பகுதிகளில்  உள்ள குடியிருப்பாளர்களின்  தேவைகளுக்கு நாடும்  மையமாக ரவாங் மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :