ANTARABANGSA

தென் தாய்லாந்தில் குண்டு வெடிப்பு- 4 பாதுகாப்பு படை வீரர்கள் காயம்

பட்டாணி, ஜூன் 22- தென் தாய்லாந்தின்
பட்டாணியில் நேற்று நிகழ்ந்த
குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாதுகாப்புப்
படையைச் சேர்ந்த 4 பேர்
காயமடைந்தனர்.

​​​பாதுகாப்புப் படையின் ஆறு
உறுப்பினர்கள் மூன்று மோட்டார்
சைக்கிள்களில் பொதுமக்களின்
குடியிருப்புகளைச்

சீரமைப்பதற்காக ஒரு கிராமத்திற்குச்
சென்ற போது இச்சம்பவம் நிகழ்ந்ததாகக்
கபோ மாவட்டக் காவல்துறையின்
தலைவர் கர்னல் போல் டெச்சாவுட்
செட்டேவிட் கூறினார்.

சம்பவ இடத்திற்கு அவர்கள் வந்தபோது
​​ஒரு வீட்டில், சொந்தமாகத்
தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்தது.
இச்சம்பவத்தில் ஒரு ரேஞ்சர் மற்றும்
மூன்று பாதுகாப்பு படை வீரர்கள்
காயமடைந்தனர். மற்ற இருவரும்
காயமின்றித் தப்பினர் என்று
பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில்
அவர் சொன்னார் .

எரிவாயு சிலிண்டருடன் இணைக்கப்பட்டிருந்த 20 கிலோ எடையுள்ள நாட்டு வெடிகுண்டு
பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது திடீரென வெடித்ததாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :