SELANGOR

உலு லங்காட் மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் பெரிய அளவிலான சாலை மேம்பாடு பணி

ஷா ஆலம், ஜூன் 22: கடந்த திங்கட்கிழமை தொடங்கி உலு லங்காட் மற்றும் பெட்டாலிங் ஜெயாவைச் சுற்றி இன்ஃப்ராசெல் மூலம் பெரிய அளவிலான சாலை மேம்பாடு பணி தொடர்ந்தது.

மேற்கண்ட நடவடிக்கை கடந்த மாதம் முதல் மாநில நிர்வாகம் தீவிரமாக செயல்படுத்தி வரும் மெகா சாலை மேம்பாடு திட்டத்தின் ஒரு பகுதியாகும் என மாநிலச் சாலை பராமரிப்பு நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது.

“மில் அண்ட் பேவ்’ முறையில் பழுதுபார்க்கும் பணி (சேதமடைந்த சாலையின் அடுக்கை அகற்றி புதிய லேயரை மாற்றவும்) ஜாலான் பிஜேஎஸ் 1/25 பெட்டாலிங் ஜெயாவில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

“மேலும், பெர்சியாரான் மஹ்கோத்தா செரஸ், உலு லங்காட்டில் பழுதுபார்க்கும் பணி “ஓவர்லேய்ர்“ முறையைப் பயன்படுத்தி நடைபெறுகிறது.


மே 16 அன்று, பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் RM50 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்பட்ட திட்டம் வெற்றியடைந்ததாக உள்கட்டமைப்பு எஸ்கோ இஷாம் அசிம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Pengarang :