SELANGOR

RM5,000 மற்றும் அதற்கும் குறைவான குடும்ப வருமானம் பெறுபவர்களுக்கு இலவச நீர்த்திட்டம்

சிப்பாங், ஜூன் 25: 2020 ஆம் ஆண்டு முதல் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இலவச நீர்த்திட்டம், உண்மையில் உதவி பெற தகுதியுள்ள குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே பயன் அளிப்பதை  உறுதிப்படுத்தும் வகையில்  மேம்படுத்தப்பட்டுள்ளது.

டாருல் எஹ்சான் நீர் திட்டத்தின் மூலம் 20 கன மீட்டர் இலவச நீரை RM5,000 மற்றும் அதற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்கள் அனுபவிக்கின்றனர் என்று உள்கட்டமைப்பு துறையின் பொறுப்பு உறுப்பினர் இஷாம் அசிம் விளக்கினார்.

“முன்பு நாங்கள் அதை RM4,000 மற்றும் அதற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களுக்காக அறிமுகப்படுத்தினோம், பின்னர் அதன் தகுதி தேவையை மேம்படுத்தினோம். இதனால் அதிகமான மக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.

டாருல் எஹ்சான் நீர் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மாநில அரசு அதிகாரத்துவத்தைக் கடைப்பிடிப்பது என்று சிலாங்கூர் பாஸ் கமிஷனர் டத்தோ டாக்டர் அஹமட் யூனுஸ் ஹைரி கூறியது குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

நீர் விரயமாவதை தவிர்க்கும் நோக்கில் இந்த திட்டம் மேம்படுத்தப் பட்டதாக இஷாம் கூறினார்.

“இந்த திட்டம் டாருல் எஹ்சான் நீர் திட்டம் என மறு பெயரிடப்பட்டுள்ளது. இதனால் உண்மையிலேயே தகுதியானவர்கள் மற்றும் பலன்களைப் பெறுவார்கள்,” என்று அவர் கூறினார். மேலும், இத்திட்டத்திற்கான இணைய விண்ணப்பங்கள் ஆண்டு முழுவதும் திறந்திருக்கும்.


கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல், மாநில அரசு நீர் திட்டத்திற்கான தகுதி நிபந்தனைகளை மாற்றியது அதாவது அதிகபட்ச குடும்ப வருமான வரம்பை RM4,000 லிருந்து RM5,000 மற்றும் அதற்கும் குறைவான வருமான வரம்பை கொண்டிருக்க வேண்டும்.


Pengarang :