SELANGOR

இணையம் வழி செலுத்தப்பட்ட மதிப்பீட்டு வரி வசூலில் RM121.39 மில்லியன் பதிவு – பெட்டாலிங் ஜெயா நகராண்மை கழகம்

ஷா ஆலம், ஜூன் 25: பெட்டாலிங் ஜெயா நகராண்மை கழகம் (MBPJ) 2023 ஆம் ஆண்டிற்கான முதல் ஐந்து மாதங்களில் இணையம் வழி செலுத்தப்பட்ட மதிப்பீட்டு வரி வசூலில் RM121.39 மில்லியனை பதிவு செய்துள்ளது.

2022 ஆம் ஆண்டு வசூலான RM116.92 மில்லியனை ஒப்பிடும் போது, இவ்வாண்டிற்கான வசூல் 3.82% அதிகரித்துள்ளது என்று அதன் மேயர் முகமட் அஸான் முகமட் அமீர் தெரிவித்தார்.

“தற்போது பெட்டாலிங் ஜெயாவில் வசிப்பவர்களை எதிர்காலத்தில் இணையம் வழி வரி செலுத்த ஊக்குவிக்கிறோம்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

நிர்ணயிக்கப்பட்டபடி முழு வருடாந்திர மதிப்பீட்டு வரியை இணையம் வழி செலுத்துபவர்களை பாராட்டுவதற்காகப் பெட்டாலிங் ஜெயா நகராண்மை கழகம் ஓர் அதிர்ஷ்ட குலுக்கு நிகழ்வை நடத்த முடிவு செய்துள்ளது.

தகுதி பெற்றவர்களுக்கு மின்சாதனப் பொருட்கள் உட்பட மொத்தம் 65 பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இந்த இணையக் கட்டணத் திட்டமானது மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கு இணையாகப் பெட்டாலிங் ஜெயா நகராண்மை கழகமும் பூஜ்ஜிய கவுண்டர்கள் மற்றும் ரொக்கம் இல்லாத முறையைச் செயல்படுத்துவராகும்.


Pengarang :