NATIONAL

பயிற்சியின் போது ராயல் மலேசியன் ஏர் ஃபோர்ஸ் உறுப்பினர் ஒருவர் பலி

சிரம்பான், ஜூன் 26: நேற்று பிற்பகல் சையத் சிராஜுடின், கெமாஸ் முகாமில் உள்ள அடிப்படை கிரேனைட் பயிற்சி தளத்தில் ஆயுதங்களைப் பயன்படுத்தி சுடுவதற்கும் குண்டுகளை வீசுவதற்கும் பயிற்சி நடைபெற்று கொண்டிருந்த போது அதன் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததாகவும் இரண்டு பயிற்சியாளர்கள் காயமடைந்ததாகவும் ராயல் மலேசியன் ஏர் ஃபோர்ஸ் (RMAF) உறுதிப்படுத்தியது.

மதியம் 12.10 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், பாதுகாப்பு உதவியாளர் வகுப்பு 1 மேம்படுத்தல் பாடநெறி தொடர் 78/23 இன் மாணவரான பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று ராயல் மலேசியன் ஏர் ஃபோர்ஸ் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

“காயமடைந்த இரண்டு பயிற்சியாளர்களும் கெமாஸ் இராணுவ மருத்துவமனையில் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டு சிகாமட் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டனர்.

“ராயல் மலேசியன் ஏர் ஃபோர்ஸ் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் உறவினர்களைத் தொடர்பு கொண்டு, விசாரணை நடத்துவதற்காக ராயல் மலேசியன் காவல்துறையிடம் வழக்கை சமர்ப்பித்துள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சம்பவத்திற்கான காரணத்தை அடையாளம் காண ஒரு புலனாய்வு மேற்கொள்ளப்படும்  என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் குடும்பங்களின் உணர்வுக்கு மதிப்பளிக்குமாறும், எனவே, விசாரணை செயல்முறை முடியும் வரை எந்த ஊகத்தையும் பரப்ப வேண்டாம் என்றும் அனைத்து தரப்பினரையும் ராயல் மலேசியன் ஏர் ஃபோர்ஸ் கேட்டுக்கொள்கிறது.

விசாரணையின் வளர்ச்சி குறித்து அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும்.

– பெர்னாமா


Pengarang :